அன்பார்ந்த தலைமையாசிரியர்களே/ மெட்ரிக்பள்ளி முதல்வர்களே
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
19 -1 -2022 முதல்
முதல் திருப்புதல் தேர்வு நடைபெற இருக்கிறது.
தேர்வு நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன
மேலும் தேர்வு நேரத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
1) வினாத்தாள் கட்டுக்களை ஒவ்வொரு பள்ளியும் ஒன்றிய அளவில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு காலை 9 மணிக்குள் சென்று வினாத்தாள் கட்டுகளை பொறுப்பான ஆசிரியர் மூலம் ஒவ்வொரு நாளும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
2)முதல் திருப்புதல் தேர்வு
பொதுத்தேர்வு நடத்துவது போல் ஒரு அறைக்கு
20 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுதும் வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட வேண்டும்.
3) விடைத்தாளில் முகப்பு பக்கத்தில்
தேர்வு எண்
தேர்வு நடைபெறும் நாள்
பாடம்
மொழி
கூடுதல் விடைத்தாட்கள் எண்ணிக்கை
மொத்த பக்கங்களின் எண்ணிக்கை
ஆகியவை மாணவரால் தெளிவாக எழுதப்பட வேண்டும்.
அறை கண்காணிப்பாளர்கள் அனைத்து விடைத்தாள் பக்கங்களிலும் தேதியுடன் கையொப்பம் இட வேண்டும்.
5) ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தவுடன் தலைமையாசிரியர் விடைத்தாட்களைப் சேகரித்து தன்
சொந்தப் பொறுப்பில் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
6) மதிப்பெண் பட்டியல் வகுப்பு வாரியாக தேர்வு எண்கள் எழுதப்பட்டு இரண்டு நகல்கள் தயார்செய்து வருகை தராத மாணவர்களுக்கு சிகப்பு மையினால் ABSENT என்று எழுதி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
7)தேர்வு தொடர்பான பதிவேடுகள் பள்ளிகளில் பராமரிக்கப்பட வேண்டும்
8) விடைத்தாள்கள் வேறு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் மூலம் மதிப்பீடு செய்ய இருப்பதால் தேர்வு முடியும் வரை அனைத்து விடைத்தாள் கட்டுகளையும் தலைமை ஆசிரியர் தன் சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment